VicksWeb upgrade Location upload ads trending
VicksWeb இந்தியா
தமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 07:00

புதுடெல்லி:  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் அளித்த பேட்டியில், ‘‘ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பாஜ தமிழகத்தில் வலுகட்டாயமாக திணிக்கிறது. மாநிலத்தில் தகுதியான அரசு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதால் மட்டும் அவர்களின் உயிரை திரும்ப கொண்டு வந்து விட முடியுமா?’’ என்று கூறினார்.


எம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:59

பெங்களூரு: 2014ல் நடந்த மக்களவை தேர்தலில், கர்நாடகாவின் ஷிவமொக்கா  தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு  எடியூரப்பா  வெற்றி பெற்றார். இதனால் தனது   எம்பி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா  மகாஜனுக்கு அனுப்பினார். அதேபோல் முளகால்மூரு தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றா ராமுலு பெல்லாரி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.


தலைமை செயலர் தாக்குதல் பிரச்னை சிசோடியாவுக்கு போலீசார் நோட்டீஸ்
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:48

புதுடெல்லி : தலைமை  செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்ட புகார் விவகாரத்தில், நாளை(வெள்ளிக்கிழமையன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் சிசோடியாவுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில், கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி அவரது வீட்டில் நடைபெற்ற அரசு திட்டங்கள் குறித்த கூட்டத்தில் தலைமை செயலர் மீது எம்எல்ஏக்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தலைமை செயலர் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 11 பேரிடம் போலீசார் இதுவரை  விசாரணை நடத்தியுள்ளனர். , கடந்த 18ம் தேதி முதல்வர் கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்தொடர்ச்சியாக, தற்போது சிசோடியா ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, நாளை காலை 11 மணிக்கு சிசோடியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


பொதுப்பணித்துறை முறைகேடு வழக்கில் 4 இன்ஜினியர்களுக்கு ஜாமீன் மறுப்பு : நீதிமன்றம் அதிரடி
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:47

புதுடெல்லி : முதல்வர் கெஜ்ரிவாலின் உறவினர் மீதான பொதுப்பணித் துறை ஊழல் குற்றச்சாட்டில் உடன் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள இன்ஜினியர்கள் 4 பேருக்கும் முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. பொதுப்பணித் துறையில் தனது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த பணியை, முழுவதுமாக நிறைவேற்றாமலே மொத்த ஒப்பந்த தொகையையும் பெற்றுக் கொண்டார் என முதல்வரின் மைத்துனர் சுரேந்தர் பன்சால் மீது ஊழல் தடுப்புத் துறை (ஏசிபி) சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வாறு பணம் வழங்கியதற்கு முதல்வர் கெஜ்ரிவாலும், அமைச்சர் சத்யேந்தர ஜெயினும் அளித்த நெருக்கடிதான் காரணம் என ஏசிபி தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகையில், எதிர்பாராத விதமாக சுரேந்தர் மரணம் அடைந்தார். அதையடுத்து, நிறுவனத்தின் பங்குதார் என்ற வகையில் சுரேந்தரின் மகன் வினய் பன்சால் மீது வழக்கு பாய்ந்தது. இந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். பின்னர், நீதிமன்றக் காவலில் தற்போது உள்ளார்.வினயுடன் பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளர் பிரவீண் குமார் கத்தூரியா, உதவி இன்ஜினியர் சுரேஷ் பால், இளநிலை இன்ஜினியர்கள் பல்ஜித் சிங், அஷுதோஸ் சிங் ஆகிய 4 பேரும் குற்றவாளிகளாக கடந்தாண்டு மே மாதம் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தயாராகி உள்ளது. எந்த நிலையிலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருந்து வரும் இன்ஜினியர்கள் 4 பேரும், தங்களுக்கு முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். விஜய் பன்சாலுக்கு ஜாமீன் வழங்க மறுத்து 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டிருந்த நீதிபதி சஞ்சய் கனகவேல் முன்னிலையில் இன்ஜினியர்களின் மனுக்கள் அனைத்தும் ஒரே மனுவாகக் கருதப்பட்டு நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது.விசாரணைக்குப் பின் நீதிபதி கூறியதாவது: மக்கள் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால் சமூகத்திலும், சொந்த வாழ்க்கையிலும் அனாவசிய பிரச்னைகள் ஏற்படும் என்பது உண்மைதான் என்றாலும், பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டு கடுமையானது. பணிகள் நிறைவேறியதா?, அதற்காக வழங்கப்பட்ட ரசீதுகள் உண்மையானதா? என சரிபார்க்காமலும், கட்டுமானத்தின் உறுதித்தனமை குறித்து ஆய்வு நடத்தாமலும், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் எங்கும் தப்பித் தலைமறைவாகிட முடியாது என்றாலும், குற்றச்சாட்டின் தன்மையை ஒப்பிடுகையில் நீதிமன்றம் அவர்களை பாதுகாக்க கருதவில்லை. எனவே, முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை ரத்து செய்து அறிவிக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


குடியிருப்பு பகுதிகளில் ஆக்ரமிப்புகள் : ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் புகார்
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:46

புதுடெல்லி : தெற்கு டெல்லி நீதி பாக் பகுதியில் சட்டவிரோத ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் எழுதிய புகார் கடிதத்தை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆம் ஆத்மி அரசு விளக்கமளிக்கும்படி தெரிவித்துள்ளது. தெற்கு டெல்லி நீதி பாக் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான சோலி சோராப்ஜி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்சி அகர்வால், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மா, காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பினர். அதில் நீதி பாக் பகுதியில் உள்ள அரசு நிலம் சட்டவிரோதமாக ஆக்ரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு இந்த பகுதியில் உள்ள இடங்களை அக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்துவதோடு, இங்குள்ள டாக்ஸி ஸ்டேண்டையும் அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல்(பொறுப்பு) மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அமர்வு தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவிட்டதோடு, தெற்கு மாநகராட்சி ஒருவாரத்துக்குள் நேரில் ஆய்வு செய்து, அறிக்கையை 4 வாரத்துக்குள் சமர்பிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஜூலை 20ம் தேதி க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மாநில கட்சிகள் பலமடைந்தால் மத்தியில் நல்லாட்சி அமையும்: மம்தா பானர்ஜி நம்பிக்கை
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:44

பெங்களூரு: ‘‘மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டுமானால் மாநில கட்சிகள் பலமாக வளர  வேண்டும்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கர்நாடக  மாநில முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். முன்னதாக, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேசியளவில் 3வது  அணியை பலப்படுத்துவது பற்றி இருவரும் ஆலோசித்தனர். பின்னர், மம்தா அளித்த பேட்டி: ‘நாட்டில் உள்ள மாநில கட்சிகளை ஒன்று சேர்த்து 3வது அணியை அமைத்தாலும் எதுவும்  செய்ய முடியாது’ என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். அமித்ஷா  போன்றவர்களின் மிரட்டலுக்கு நாங்கள் பணிய மாட்டோம். மாநில  கட்சிகள் பலமாக வளர்ந்தால்தான் நாட்டில் நல்லாட்சி கொடுக்க முடியும். தேசிய கட்சியான  காங்கிரஸ், மாநில கட்சியான மஜத.வுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரம்  வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார். மம்தாவை சந்தித்த பிறகு சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘குமாரசாமி  பதவியேற்பு விழாவில் பல மாநில முதல்வர்கள், கட்சி  தலைவர்கள் ஒரே மேடையில் சேர்ந்திருப்பதும் புதிய வரலாறாக அமைந்துள்ளது.  தேசிய கட்சிகளை எதிர்க்க மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்றார்.


திவால் அறிவிப்பு விதிமுறை திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:44

புதுடெல்லி; திவால் அறிவிப்பு தொடர்பான விதிமுறைகளை திருத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. திவால் நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு குழுவை நியமித்து இருந்தது. அந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தயார் செய்து மத்திய அரசிடம் வழங்கியது. அதை 14 பேர் கொண்ட திவால் சட்டக்குழு ஆய்வு செய்து இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகளை மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. அதில் வீடு வாங்கும் நபர்களையும் நிதிக்கடன் வாங்குபவர்களாக கருத வேண்டும். அவர்களும் திவால் தொடர்பான நோட்டீஸ் கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இந்த சலுகையை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.இந்த புதிய பரிந்துரையை மத்திய அமைச்சரவை நேற்று கூடி பரிசீலனை செய்து அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘புதிய திவால் அறிவிப்பு விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பதை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் வரை அதைப்பற்றி நான் விரிவாக பேச முடியாது. ஏனெனில், அந்த திருத்தத்திற்கு அரசியல் சாசன பாதுகாப்பு இருக்கிறது’’ என்றார்.மணிப்பூரில் விளையாட்டு பல்கலை:  ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், ‘‘நாட்டின் முதல் விளையாட்டு பல்கலைக் கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், உயர்தொழில்நுட்ப விளையாட்டு பயிற்சி ஆகியவை இங்கு அமைக்கப்படும். இதற்கு 2014-15 பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார்’’ என்றார்.


பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:43

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் 9வது நாளாக நேற்றும் ஜம்மு, கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் தொடர்ந்தது. காலை 9 மணிக்கு சம்பாவில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதேபோல் கதுவா மாவட்டத்தில் ஹீராநகரில் 3 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ஆர்எஸ்புரா, அர்னியா, பிஸ்னா மற்றும் ரம்கர் மற்றும் சம்பா பகுதிகளிலும் நேற்று காலை பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய தாக்குதலில்  2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை மூத்த அதிகாரி கூறுகையில், பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் தரப்பிலும் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது” என்றார்.


நடப்பாண்டில் இதுவரை எட்டு பேருக்கு மலேரியா, 12 பேருக்கு டெங்கு பாதிப்பு : மாநகராட்சி தகவல்
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:42

புதுடெல்லி : நடப்பாண்டில் இதுவரை 8 பேருக்கு மலேரியா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், இந்த மாதத்தில் மட்டும் 4 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். டெல்லியில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வரை குறைந்தபட்சம் 12 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. மலேரியாவை பொறுத் தவரை, கடந்த மே 19ம் தேதி வரை 8 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பிப்ரவரியில் இருவருக்கும், மார்ச், ஏப்ரலில் தலா ஒருவருக்கும், இந்த மாதத்தில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 4பேருக்கு சிக்குன் குனியா நோய் அறிகுறி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பரவல் சீசன் என்பது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டின் ஜூலை மற்றும் நவம்பர் மாதத்துக்கு இடையே தொடங்கி முடிந்து விடும். இந்தமுறை டிசம்பர் மாதம் பாதிநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை மலேரியா மற்றும் சிக்குன்குனியாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதன்பின்தற்போது வரை மலேரியா, சிக்குன்குனியாவுக்கு தலா மூன்று பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 13ம் தேதி வரை எந்தவித நோய் தாக்குதலும் இல்லை. வீடுகளில் கொசு உற்பத்தியாவதற்கான சூழல் உள்ளதா என்பதை கண்காணிக்கும் ஊழியர்கள், கடந்த 19ம் தேதி வரை 14,386 அதற்கான சாத்தியக்கூறுகளை இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுதவிர, 18,624 பேருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. 1,410 வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபற்றி தெற்கு மாநகராட்சி ஆணையர் பி கே கோயல் கடந்த மாதம் தெரிவிக்கையில், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருந்தார். அதோடு, கொசு உற்பத்தி காரணிகள் உருவாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைமைக்கும், அலுவலகங்களுக்கும் வலியுறுத்தியிருந்தார். மேலும், கன்வென்ஷனல் டிசர்ட் கூலர்களுக்கு மாற்றாக, தேசிய நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம்(என்சிடிசி) தயாரித்துள்ள கூலர்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த கூலர்கள் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் என  அறிவுறுத்தியிருந்தனர்.முக்கிய அம்சங்கள்* டெங்குவை பொறுத்தவரை கடந்த ஆண்டில் டெங்குவுக்கு சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டில் சுமார் 9,271 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். * மாநகராட்சி தரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வரை 4 பேர் மட்டுெமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிலர் உயிரிழந்தபோதும் அவற்றை மாநகராட்சிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.*  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி, கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் பலியானதே டெங்குவுக்கு முதல் பலியாக டெல்லியில் பதிவானது. அதன்பின்னரே அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.* அக்டோபரில் 3 பேர் தெற்கு டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மருததுவமனையில் உயிரிழந்தனர்.மலேரியா மற்றும் சிக்குன்குனியாவை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் முறையே 1,142 மற்றும் 940 என்கிற அளவில் பதிவானது.


ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
Source:  Dinakaran.com
Thursday, 24 May 2018 06:42

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக் குழுவினர் மீது போலீசார் தலையிலும், முகத்திலும் துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் பகுதியில் காற்று, தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஏற்படும் என்பது குறித்து அரசுக்கு பலமுறை தெரிவித்தும் பதில் கிடைக்காததை தொடர்ந்தே பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு பொறுப்பேற்று ஆளும் அதிமுக அரசு பதவி விலக வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட உத்தரவிட வேண்டும். வேதாந்தா குரூப்புக்கு சொந்தமான இந்த ஆலை, ஆர்எஸ்எஸ்- பாஜ ஆதரவுடன் செயல்படுகிறது. இதனால்தான், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி விரிவாக்கத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.


<< < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > >>